TamilsGuide

அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக 1.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கம்

இலங்கையின் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இதுவரை 1.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேலும், 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டில்,  மேலும் 30 பில்லியன் ரூபா அவசர தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்  எச்.எஸ்.கே.ஜே. பண்டார தெரிவித்தார்.

தேவையான அளவிற்கு நிதியை கோருமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் தற்போது நடைபெறும் நிகழ்நிலை கலந்துரையாடலின் ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.  

எந்தவொரு தடையும் இன்றி செயல் திறனுடன் அனர்த்த நிவாரண பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியினால் அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 

Leave a comment

Comment