TamilsGuide

பதுளையில் 6 இடங்களில் மண்சரிவு- நால்வர் உயிரிழப்பு, 9 பேர் மாயம்

நிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் 6 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக அபேவர்தன தெரிவித்தார்.

நேற்று (26) ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment

Comment