இன்று (27) மற்றும் நாளை (28) நடைபெறவிருந்த 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறாது என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
குறித்த பரீட்சைகளுக்கான மாற்றுத் திகதி தொடர்பில் பரீட்சார்த்திகளுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.


