TamilsGuide

சிவாஜி மீது அதீத காதல்.. 6 மாதம் மட்டுமே நிலைத்த தாலி!! நடிகர் திலகம் மற்றும் பத்மினியின் மறுபக்க காதல்

காலம் காலமாகவே எத்தனையோ திறமையான நடிகர்கள் சினிமாவில் வளம் வந்து கொண்டே இருந்தாலும், நம் தமிழ் சினிமா மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சினிமா திரையுலகத்தினரால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பின் பல்கலைக்கழகம், நடிப்பின் சக்கரவர்த்தி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட சிவாஜி கணேசனின் பல திரைப்படங்கள் ரசிகர்களால் இன்றும் காலம் கடந்து பேசப்பட்டு வருகிறது. சினிமா திரை உலகத்தில் இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் நடிக்கும் எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும், அந்த நடிப்பிற்கு உயிர் கொடுத்து, உணவுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அந்த காலத்தில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும் சிவாஜி கணேசன் என்றால் மிகவும் பிடித்தமான நடிகராகவே இருந்தார். நடிகர்களுக்கு இவரை எந்த அளவிற்கு பிடித்து இருந்ததோ அதை அளவிற்கு நடிகைகளுக்கும் பிடித்தவராக இருந்தார் சிவாஜி கணேசன். இவருடன் பல நடிகைகள் ஜோடி போட்டு நடித்தாலும், குறிப்பாக ஒரே ஒரு நடிகை மட்டும், இவர் மீது அளவில்லா காதலில் இருந்துள்ளார். அதுகுறித்த சம்பவம் ஒன்று தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் 60 மற்றும் 70 கால கட்டத்தில் உச்ச நடிகராக ஜொலித்துக் கொண்டு இருந்தவர் தான் நடிகர் திலகம் சிவாஜி. இவர் எத்தனையோ நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து இருந்தாலும், நடிகை பத்மினியுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பத்மினியும் சிவாஜியும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதால் பல படங்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர்.

இதனால், இவர்கள் இருவரும் நிஜமான கணவன் மனைவி என அனைவரும் அந்த காலகட்டத்தில் பேசினார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் காதலிப்பதாக அப்போது பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளன. நடிகர் சிவாஜி கணேசன் நாடகத்துறையில் இருக்கும் போதே அவருக்கு திருமணமாகிவிட்டதால், பத்திரிக்கையில் பரவிய செய்தி வதந்தி என்றும், நானும் பத்மினியும் நல்ல நண்பர்கள் என்று, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஆனால், பத்மினி மனதில் சிவாஜி கணேசன் மீது அளவில்லா காதல் இருந்துள்ளது.

சிவாஜி கணேசனும் பத்மினியும் ஒரு படத்தில் திருமணம் செய்து கொள்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்த திருமணத்தை உண்மையான திருமணம் என நினைத்துக்கொண்ட பத்மினி, சிவாஜி கட்டிய தாலியை, படம் வெளியாகி ஆறு மாதங்கள் ஆன பிறகும் கழுத்திலிருந்து கழட்டவே இல்லையாம். அதை மறைத்து வைத்து சிவாஜியை மானசீக கணவராக நினைத்து வாழ்ந்துள்ளார் பத்மினி. கழுத்தில் இருந்த தாலியை பார்த்த அவரது சகோதரி அம்மாவிடம் இது குறித்து சொல்ல குடும்பத்தில் பெரிய பிரச்சனையே வெடித்து இருக்கிறது.

அதன் பின் தான் நடிகை பத்மினி 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்தார். பிறகு 1977 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்து வந்த பத்மினி, 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது 74வது வயதில் உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் கொடி கட்டிப்பறந்த பத்மினியை ரசிகர்கள் நாட்டியப் பேரொளி அழைத்து வந்தனர்.

தமிழச்சி கயல்விழி

Leave a comment

Comment