புறக்கோட்டை மிதக்கும் சந்தையை ஜப்பானிய முதலீட்டாளருக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விட நகர அபிவிருத்தி அதிசார சபை (UDA) தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய ஏற்பாட்டின் கீழ், முதலீட்டாளர் வளாகத்திற்குள் உள்ள கடைகள் மற்றும் இரவு சந்தையைப் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய கடை உரிமையாளர்களுக்கான இழப்பீடு குறித்து இன்னும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
திட்டம் தொடர்பாக முதலீட்டாளர் ஏற்கனவே நகர அபிவிருத்தி அதிசார சபை 16 மில்லியன் அமெரிக்க தொடர்களை செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புறக்கோட்டை மிதக்கும் சந்தை முதலில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் 2014 ஆம் ஆண்டு 344 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டது.
இதில் 92 கடைகள் உள்ளன, அவற்றுடன் இரண்டு பெரிய உணவகங்களும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


