TamilsGuide

இலங்கையில் நிகழ்ந்த சோகம் -ஆற்றுக்குள் கவிழ்ந்த கார், இருவர் பரிதாப மரணம்

கொஸ்வத்த, நாரவில பகுதியில் உள்ள ரத்மல் ஓயாவுக்கு கார் ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது.

துன்கன்னாவை,மானிங்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் மற்றும் துன்கன்னாவை, பண்டாரநாயக்க புற பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் காரில் சந்தானமகம வீதி வழியாக வந்து விகாரைக்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியில் உள்ள குழியொன்றில் விழுந்து அருகிலுள்ள ரத்மல் ஓயாவுக்கு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கார் கவிழ்ந்த பிறகு, பிரதேசவாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரையும் வெளியே எடுத்தபோதும் அவர்கள் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
 

Leave a comment

Comment