TamilsGuide

இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளை குறிவைத்து சைபர் தாக்குதல்

இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளை குறிவைத்து ஒரு பெரிய சைபர் தாக்குதல் இடம்பெற்றுவருகிறது.

இதில் முக்கிய தகவல் தொழில்நுட்ப அமைப்புகளைப் பகிரும் (Royal Borough of Kensington ) ராயல் பரோ ஆஃப் கென்சிங்டன் மற்றும் (Chelsea) செல்சியா (RBKC) மற்றும் (Westminster City Council) வெஸ்ட்மின்ஸ்டர் சிட்டி கவுன்சில் (WCC) ஆகியவை உள்ளடங்குகின்றன.

இந்த ஊடுருவல் காரணமாக குடிமக்களின் தரவுகள் சமரசம் செய்யப்படக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளதால், சம்பந்தப்பட்ட கவுன்சில்கள் தகவல் ஆணையர் அலுவலகத்திற்கு (ICO) அறிவித்துள்ளன.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த அதிகாரிகளின் அமைப்புகளைப் பாதுகாக்கவும், செயல்பாட்டை மீட்டெடுக்கவும், அத்தியாவசிய பொது சேவைகளைப் பராமரிக்கவும் சிறப்பு சைபர் நிபுணர்கள் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்துடன் (NCSC) நெருக்கமாக ஒத்துழைத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாதுகாப்பு நிபுணர்களால் இது தீவிரமான ஊடுருவல் என்று விவரிக்கப்பட்டாலும், இந்தத் தாக்குதலை நடத்தியவர் யார் என்று கண்டறியவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் கால அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிவித்துவருகின்றனர்.
 

Leave a comment

Comment