நிலவும் பாதகமான வானிலை காரணமாக மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்ட இரவு அஞ்சல் ரயில் நானுஓயா நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பதுளையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் இரவு அஞ்சல் ரயில் நானுஓயா நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கும்.


