TamilsGuide

மீண்டும் அமெரிக்கா விஜயம் செய்யும் கார்னி

கனடிய பிரதமர் மார்க் கார்னி மீண்டும் அமெரிக்கா விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஜீ20 மாநாட்டின் நிறைவின் செய்தியாளர் சந்திப்பில், டிரம்புடன் அண்மையில் தொடர்பு கொண்டீர்களா என ஊடகவியலாளர்கள் கார்னிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கான அவசியம் என்ன என கார்னி பதில் கேள்வி எழுப்பியுள்ளார். அது ஒரு சிறிய விபரம். நான் அவருடன் பேசினேன். தேவையான நேரத்தில் மீண்டும் பேசுவேன் என தெரிவித்துள்ளார். இப்போது அவசரமாக பேச வேண்டிய விஷயம் இல்லை.

அமெரிக்கா வணிக விவாதங்களுக்கு திரும்ப விரும்பும்போது நாம் பேசுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

கார்னி அடுத்த வாரம் அமெரிக்க தலைநகருக்கு சென்றால், ஏப்ரல் தேர்தலுக்குப் பிறகு அவர் அமெரிக்கா பயணம் செய்யும் மூன்றாவது பயணமாகும்.

நீடித்து வரும் கனடா-அமெரிக்க வர்த்தகப் போரின் மத்தியில் பயணம் நடைபெறுகிறது.

தென் ஆபிரிக்காவில் கார்னில் வேலையிழப்பு தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. 

Leave a comment

Comment