பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெட்ரா படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.
இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein).
இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். இப்படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான 'உசே கெனா' மனதை உருக்கும் வகையில் இருந்தது.
இந்நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் அண்மையில் நடிகை கிரித்தி சனோன் பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில், "தேரே இஷ்க் மெய்ன் படம் என்னை ரொம்ப பாதித்தது. படப்பிடிப்பிலும் அது முடிந்த பின்பும் அக்கதாபாத்திரத்தின் தாக்கம் அப்படியே இருந்தது. என் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இது இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.


