TamilsGuide

அமெரிக்க நிறவெறியின் கோர முகத்தை காட்டிய துல்சா படுகொலைகளில் உயிர்தப்பிய கருப்பின பெண் 111 வயதில் மறைவு

மே 31, 1921 அன்று, அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் துல்சாவில், வெள்ளையர்களின் ஒரு கும்பல் 300க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க-அமெரிக்கர்களைக் கொன்றது. இதுவே துல்சா படுகொலை என அழைக்கப்படுகிறது.

17 வயதுடைய வெள்ளையின லிப்ட் ஆபரேட்டர் சிறுமியை ஷூ பாலிஷ் தொழில் செய்த 19 வயது கறுப்பின இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்ததாக பரவிய தகவலை அடுத்து கறுப்பினத்தவர்களின் வீடுகள் மட்டும் கதைகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வெள்ளியாயினத்தவர் இந்த படுகொலைகளை அரங்கேற்றினர்.

ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும் உள்ளூர் செய்தித்தாள் ஒன்று வெளியிட்ட பொய் செய்தியால் நிற வெறி தூண்டப்பட்டு இந்த படுகொலைகள் அரங்கேற்றப்பட்டதாக தெரியவந்தது.

சுமார் 2 நாட்கள் நீடித்த இந்த படுகொலைகளில் 300 பேர் கொல்லப்பட்டனர். 800 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் முற்றிலுமாக தீவைக்கப்ட்டு நாசமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகினர்.

இந்நிலையில் துல்சா படுகொலையில் உயிர்த்தியவர்களில் தற்போது மூத்தரவாக அறியப்படும் 111 வயதுடைய வயோலா பிளெட்சர் கடந்த திங்கட்கிழமை காலமானார்.

அமெரிக்க வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான துல்சா படுகொலையின் போது பிளெட்சர் ஒரு சிறுமியாக இருந்தார்.

படுகொலைக்குப் பிறகு வீடற்றவராக மாறிய பிளெட்சர் தொடக்கப் பள்ளியை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் வெள்ளையர் குடும்பங்களுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார்.

சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், "கறுப்பின மக்கள் சுட்டுக் கொல்லப்படுவதையும், அவர்களின் உடல்கள் தெருக்களில் கிடப்பதையும், அவர்களின் கடைகள் எரிக்கப்படுவதையும் இன்னும் என்னால் பார்க்க முடிகிறது," என்று விவரித்தார். 
 

Leave a comment

Comment