TamilsGuide

Toronto Rexdale பகுதியில் ATM இயந்திரம் உடைப்பு..

Toronto Rexdale பகுதியில் ஒரு CIBC வங்கியின் ATM இயந்திரத்தை excavator கொண்டு உடைத்து திருடர்கள் தாக்கிய சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் Kipling Avenue அருகிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் வங்கிக்குச் சொந்தமான சுவரை பின்தள்ளி ஒரு backhoe இயந்திரம் மூலம் உடைத்ததாக தகவல் கிடைத்தது.

சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. காவல் துறை அதிகாரிகள் வருவதற்கு முன்பே சந்தேக நபர்கள் தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளது. பணம் திருடப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment