TamilsGuide

இளகிய மனம் படைத்த வள்ளல்...

1963 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்., நடிப்பில வெளியாகி 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம் பரிசு. இப்படத்தின சில காட்சிகள் தேக்கடியில் படமாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் 30 வயது மதிக்கதக்க ஒரு பெண் திடீரென ஓடிவந்து எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார். அவரது இரண்டு பெண் குழந்தைகளும் அருகில் நின்றன. அவரை எழுந்திருக்க சொன்ன எம்.ஜி.ஆர்., என்ன விஷயம் என்று விசாரித்தார். அந்தப் பெண், ‛‛தன் கணவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் வனத்துறையில் வேலை பார்த்து வந்த தன் கணவர் சரிவர வேலைக்கு போகாமல் ஒரு நாள் குடித்துவிட்டு வரும்போது காட்டு யானை தாக்கி என் கணவர் இறந்துவிட்டார். அரசு நிர்வாகம் நஷ்ட ஈடோ கருணை தொகையோ தரவில்லை எங்களை காப்பாற்ற வேண்டும்'' என்று எம்.ஜி.ஆரிடம் முறையிட்டார்.

இளகிய மனம் படைத்த எம்.ஜி.ஆர், ‛‛அழாதே உன் கணவர் பணியாற்றிய வனத்துறையில் உனக்கு தெரிந்த அதிகாரி யாராவது இருந்தால் நான் கூப்பிடுவதாக சொல்லி நாளை அழைத்து வா, மேலும் உன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து டீச்சர் ஒருவரையும் அழைத்து வா என்று சொல்லி அனுப்பினார். அதேபோல வனத்துறை அதிகாரி ஒருவரையும் தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் இருந்து டீச்சர் ஒருவரையும் மறுநாள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அழைக்து வந்தார் அந்தப் பெண். அந்தப் பெண் அதிர்ஷ்டமோ என்னவோ அந்த வனத்துறை அதிகாரி எம்.ஜி.ஆரின் ரசிகர். எம்.ஜி.ஆரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் இருநத அவரை எம்.ஜி.ஆர் விசாரித்து விபரம் அறிந்த பின் இப்போது இவர்கள் நிலைமை ரொம்ப பரிதாபமாக உள்ளது உங்கள் அலுவலக விதிமுறைகளின்படி இவர்களுக்கு அதிகபட்சமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்ய நடவடிக்கை எடுங்கள்.

இது சம்பந்தமாக உயர் அதிகாரி யாரிடமாவது பேசவேண்டுமென்றால் நானே பேசுகின்றேன் என்றார். மேலும் இப்போது குடிசையில் தங்கும் இவர்கள் கவுரவமாக தங்கும்; வகையில் வாடகைக்கு ஒரு சிறிய வீட்டையும் அந்தப்பெண்ணிற்கு ஒரு வேலையையும் வாங்கித்தர அந்த அதிகாரியிடம் கேடடார். எம்.ஜி.ஆரே கேட்கும் போது அவரது ரசிகரான அந்த அதிகாரி மறுப்பாரா என்ன? இரண்டுக்கும் ஒப்புக்கொண்ட அந்த அதிகாரி தனக்கு தெரிந்த வீட்டில் அந்த பெண்ணிற்கு வீட்டு வேலை செய்ய சேர்த்து விடுவதாகவும் கூறினார்.

பின்னர் அந்தப்பெண்ணின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் டீச்சரை அழைத்து எஸ்எஸ்எல்சி வரை இந்த பிள்ளைகள் படிப்பதற்கான செலவுகளை கேட்டறிந்தார். படத்தின் தயாரிப்பாளரான கொட்டாரக்கராவிடம் பேசி கணிசமான ஒரு தொகையை வாங்கி அதை தனது சம்பளத்தில் கழித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அந்த தொகையை அப்படியே அந்த பெண்ணிடம் கொடுத்தார் எம் ஜி ஆர். ஒரு வாரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார் அந்த வனத்துறை அதிகாரி. உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் அரசு மூலம் அந்த பெண்ணிற்கு நஷ்ட ஈடாக ரூ.27 ஆயிரம் கிடைக்கும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் அந்தப்பணம் கிடைத்துவிடும் என்றும் கூறினார். இதை கேட்ட எம்ஜிஆருக்கு மிகுந்த மகிழ்ச்சி. 1963 ஆம் ஆண்டில் ரூ.27 ஆயிரம் என்பது மிகப்பெரிய தொகை..

வாழ்க! பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ்.

Devaraj Andrews

Leave a comment

Comment