எம்ஜிஆர் விமான பைலட்டாகவும், ஸ்ரீதேவி அவருக்கு ஜோடியாகவும் நடிக்க கேப்டன் ராஜா என்ற படம் துவங்கப் பட்டது.
எம் ஜி ஆருடன் மகள் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதில் ஸ்ரீதேவியின் அம்மா அப்பாவுக்கு அளவில்லாத ஆனந்தம். ஆனால் எம் ஜி ஆர் முதல்வர் ஆனவுடன் கை விடப்பட்ட படங்களில் (ஆக 1977 ஆம் ஆண்டு தான் முதல்வர் ஆகி விடுவோம் என்று எம் ஜி ஆறே உறுதியாக நம்பவில்லை. இது அரசியல் பாடம்!) கேப்டன் ராஜாவும் ஒன்று.
அதில் ஸ்ரீதேவியை விட அவரது அப்பா அம்மாவுக்கே ரொம்ப வருத்தம்.
இந்நிலையில் முதல்வர் எம் ஜிஆரை பார்த்து வாழ்த்துச் சொல்ல வந்த ஸ்ரீதேவி மற்றும் அவரது பெற்றோர்களை வரவேற்று விருந்தினர் அறையில் பேசிக் கொண்டிருந்தார் எம் ஜி ஆர். ஸ்ரீதேவியின் பெற்றோர்கள் அந்த சமயத்திலும் மகள் எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடிக்க முடியாமல் போன ஏமாற்றத்தை சொல்ல,
ஸ்ரீதேவியின் கண்கள் மட்டும் இதற்கு சம்மந்தமே இல்லாமல் வேறு எங்கோ நிலைத்துக் கிடந்தது.
வந்தவர்களுக்கு உணவு உபசரிப்பு முடிந்து, ஸ்ரீதேவி குடும்பத்தினர் விடை பெற முயலும் போது அந்த அறையில் இருந்த கிட்டதட்ட 6 அடி உயர பித்தளை விளக்கு ஒன்றை தூக்கி ஸ்ரீதேவியை நோக்கி "இத தானே இவ்வளவு நேரம் பார்த்துட்டு இருக்க. என் நினைவா நீயே வச்சுக்க" என்று சொல்ல, திகைத்து போனார் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவியின் பெற்றோர்களை பார்த்து எம் ஜி ஆர், " உங்க வருத்தத்தை இனிமே என்னால் சரி செய்ய முடியாது. ஆனால் உங்க பொண்ணுக்கு என் கூட நடிப்பதை விட அந்த விளக்கு தான் ரொம்ப புடிச்சு இருந்தது. அதைக்கொடுத்து சந்தோசஷப் படுத்திட்டேன்" என்றார் எம் ஜி ஆர்.
அந்த விளக்கை ஸ்ரீதேவி மும்பைக்கு எடுத்துக்கொண்டு சென்று விட்டார் என கூறப்படுகிறது.


