உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினால் தடைபட்டு, தொழிலாளர் பிரச்சனை முடிவுக்கு
வந்து மிக வேகமாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம்........
படப்பிடிப்பின் போது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்தை
நோக்கி தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன்
அருகில் வருகிறார்....
சாய்ந்து அமர்ந்திருந்த நடிகர் திலகம்
சரவணன் அவர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக நிமிர்ந்து உட்காருகிறார்.....
சரவணன் அவர்கள் நடிகர் எஸ் வி சுப்பையா ஒரு படம் தயாரிக்க போகிறார்
அதில் நீங்கள் நடிக்க வேண்டுமென்று விரும்புகிறார்........
ஏன் என்னிடம் நேரிலேயே கேட்கலாமே
நான் மாட்டேன் என்றா சொல்லப் போகிறேன்....என்ன கதையாம் அதைப் பற்றி ஏதாவது சொன்னாரா என்று கேட்க
கதை மிகவும் அருமையான கதை நாவலாக வெளிவந்த கதை நம்ம ஜெயகாந்தனின் கை விலங்கு கதை தான்....என்கிறார் சரவணன் அவர்கள்
நல்ல கதை நான் படித்திருக்கிறேன்....
அதில் எனக்கு என்ன கதாபாத்திரம் என்று கேட்க, சரவணன் அவர்கள்
பனையேறும் தொழிலாளி கதாபாத்திரம்
என்கிறார்.நடிகர் திலகத்தின் கண்கள்
அப்போதே சாமுண்டி கிராமணியாக
மாறுகிறது.....
சரி நடித்துக் கொடுக்கிறேன்.....
நம்ம படம் முடியும் வரை என்னிடம் கால்ஷீட் இல்லை முடிந்ததும் பார்க்கலாம்
என்னோடு பல படங்களில் நடித்த சுப்பையாவிற்காக நான் நடிக்கிறேன்.
ஆனால் ஒரு கண்டிஷன் இந்த படத்தில் நடிப்பதற்காக எனக்கு பணம் வேண்டாம்
இதை சுப்பையாவிடம் சொல்லிவிடுங்கள் என்கிறார்
நடிகர் திலகம்..........
சரவணன் அவர்கள் சரி என்று சொல்லிவிட்டு, நீங்கள் உயர்ந்த மனிதன் படத்திற்காக தந்துள்ள கால்ஷீட்டில்
அட்ஜஸ்ட் செய்து நான் நாள் ஒதுக்குகிறேன்...
நீங்கள் அந்த நாட்களில்
அந்தப்படத்தில் நடித்துக் கொடுங்கள்
என்கிறார்....
நடிகர் திலகம் சம்மதம்
தெரிவிக்க நான் மற்றதை சண்முகத்திடம் பேசிக் கொள்கிறேன் என்கிறார் சரவணன் அவர்கள்.............
இயக்குநர் விஜயன் என முடிவு செய்து
மற்ற வேலைகளை சுப்பையா அவர்கள்
சுறுசுறுப்பாக கவனிக்கிறார்.......
படத்திற்கு காவல் தெய்வம் என்று பெயர் சூட்டப்பட்டது......
நடிகர் திலகம் இந்த படத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே நடித்து அவருடைய காட்சிகளை முடித்துக் கொடுத்து விட்டார்
இடையில் உயர்ந்த மனிதன் படமும் முடிந்து திரைக்கு வந்து வெற்றிகரமாக
ஓடியது..........
பைனான்ஸ் பிரச்சனையால் காவல் தெய்வம் தாமதமாகியது...........
ஒரு வழியாக திரைக்கு வந்த காவல் தெய்வம் சுப்பையா அவர்களை கைவிடவில்லை.....
நடிகர் திலகத்தின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது...
கெளரவ நடிகராக நடிகர் திலகம் நடித்து இருந்தாலும் நடிகர் திலகத்தின் காட்சிகள் படம் முழுவதும் வரும்படி எடிட்டிங் செய்திருந்தார்கள்.............
சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காவல் தெய்வம் நல்ல லாபத்தை சுப்பையா அவர்களுக்கு வாரி வழங்கியது........
ஒரு நாள் சுப்பையா அவர்கள் நடிகர் திலகத்தை ஒரு டிபன் கேரியரோடு சந்திக்கச் செல்லுகிறார்..........
நடிகர் திலகத்திடம் படம் நல்ல ரிசல்ட்
நல்ல வசூல் என்று சொல்லியபடியே
டிபன் கேரியரை நீட்டுகிறார்....நடிகர்
திலகம் என்ன என்பது போல் பார்க்கிறார்
ஒண்ணுமில்ல படத்தின் வெற்றிக்காக
ஸ்வீட் வாங்கி வந்தேன் என்கிறார்.....
நடிகர் திலகம் சிரித்துக் கொண்டே கேரியரை திறக்கிறார்.....
முதல் அடுக்கிலும் இரண்டாம் அடுக்கிலும் சில ஸ்வீட் வகைகள்.............
நடிகர் திலகம் கடைசி அடுக்கை திறக்க
முனையும் போது .....சரி...நான் போய்ட்டு வருகிறேன் என்று நழுவுகிறார்.........
என்ன...கிளம்பியாச்சா...கொஞ்சம்
நில்லுங்க....என்று சொல்லிக் கொண்டே
டிபன் பாக்ஸிங் அடித்தட்டை திறக்கிறார்.
அடித்தட்டு நிறைய பணம்..........
பணத்தை பார்த்ததும் நடிகர் திலகத்தின்
முகம் மாறுகிறது.....என்ன இது....
என்று கேட்க.....தடுமாற்றத்துடன்
சுப்பையா அவர்கள் படத்தில் நடிப்பதற்கு
உங்களுக்கு பணம் தரவில்லைல்ல
அதான்.....என்று இழுக்கிறார்......
நான் பணம் கேட்டேனா?
பணத்துக்காக வா உங்க படத்துல நடிச்சேன்.....ஏன் இப்படி நான் செய்த உதவியை அசிங்கப்படுத்துறீங்க
என்று சீறுகிறார்......நான் ஆரம்பத்திலேயே சரவணன் கிட்டே சொல்லிட்டேன்....சுப்பையா படத்திலே நடிப்பதற்கு எனக்கு பணம் வேண்டாம் என்று....அவர் சொல்லி இருப்பாரே....
ஆமாம் அவர் சொன்னார்....
நான் தான் நல்ல லாபம் கிடைச்சிருக்கு அதனால் உங்களுக்கு பணம் கொண்டு வந்தேன்...தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க என்றார் சுப்பையா
சமாதானம் அடைந்த நடிகர் திலகம் அவரிடமே பணத்தை திருப்பி கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்.......
ஒரு சக நடிகருக்கு உதவிட வேண்டும் என்ற நடிகர் திலகத்தின் நல்ல எண்ணம்
நடிகர் திலகத்தின் நல்ல எண்ணத்திற்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்து ஏவிஎம் சரவணன் அவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட்டில் அட்ஜெஸ்மென்ட் செய்து உதவி புரிந்தார்...........
இருவருமே உயர்ந்த மனிதர்கள்.........
நடிகர் திலகமும் சுப்பையா அவர்களும் பேசிக் கொள்வது வேறு மாதிரியாக இருக்கும்.. அவர்களின் நட்பு அப்படி....
G Laksmanan


