'அபியும் நானும்' படத்தில் த்ரிஷா ஒரு பஞ்சாபி பையனை திருமணம் செய்து கொள்வதாக கதை இருக்கும். அதை 80களிலேயே செய்தது தர்மேந்திராவும் ஹேமமாலினியும்.
தர்மேந்திராவை முதலில் திரையில் பார்த்தது sholay படத்தில் தான். ஷோலேவில் தர்மேந்திரா-அமிதாப் என இரண்டு கேரக்டர் இருந்தாலும் நாட்டி பாய் ரோல் தர்மேந்திராவுக்காக தான். அமிதாப் எதையோ பறி கொடுத்த Feelல் இருப்பார்.
தர்மேந்திரா அதாவது தரம்ஜி என அழைக்கப்படும் தர்மேந்தர் ஷோலே படத்தில் நடிக்கும் போதே ஹேமாவுக்கு நூல் விடத்தொடங்கினார். படு ஸ்மார்ட்டான தோற்றம் அவருக்கு இயற்கையாகவே அமைந்து விட்டது. ஒரே மைனஸ் உயரமில்லாதது.
படத்தில் ஹேமா சாமி கும்பிட வரும் போது ஹேமாவை காதலிக்க வைக்க சாமி சிலைக்கு பின்புறமாக நின்று புனலை வைத்துக்கொண்டு சாமி போலவே பேசுவார். உனக்கு நான் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை வீரு(தர்மேந்திரா) தான் என சொல்லி காதலிக்க வைப்பார். ஹேமாவை திருமணம் செய்ய தண்ணீர் தொட்டியின் மேலேறி குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவார்.
கேமிராவுக்கு முன்னால் தரம்ஜி இதை செய்யும் அதே நேரத்தில் கேமிராவுக்கு பின்னால் க்ளாப் பாய்களிடம் காதல் காட்சிகளில் தப்பு தப்பாக அடிக்கச்சொல்லி தாமதப்படுத்த பணம் கொடுப்பாராம். ஹேமாவுக்கு முன் தர்மேந்திரா, சஞ்சீவ் இருவருமே அம்புகள் விட ஹேமா செலக்ட் செய்தது திருமணமாகி நான்கு குழந்தைகள் இருந்த தரம்ஜியை தான். இஸ்லாமியர்களாக மாறி திருமணம் செய்து கொண்டார்கள். தர்மேந்திரா தலாவர் கான். ஹேமா ஆயிஷாபி என மாறியே திருமணம் செய்து கொள்ள வைத்தது இந்தியச்சட்டம். அப்படி தரம்ஜி தமிழ்நாட்டு மாப்பிள்ளையானார்.
பாவம் சஞ்சீவ் குமார் திருமணமே செய்து கொள்ளாமல் இறந்தார்.
தர்மேந்திரா ஸ்டைலோடு நல்ல உறுதியான உடலைக்கொண்டவர். கடைசி வரை அவர் வயதான தோற்றம் ரொம்ப லேட்டாக கண்டார்.
ஜுஹ்னு, தி பர்னிங் ட்ரெயின், தரம்வீர் படமெல்லாம் தர்மேந்திராவோட ஸ்டைல் அசத்தலா இருக்கும். (நான் பார்த்தது). ஜுஹ்னு தமிழில் 'குரு' என கமல் நடிக்க வந்தது. யாதோன்கி பாரத் ஒரு அட்டகாசமான படம். தமிழில் எம்.ஜி.ஆர் நடித்தார். தர்மேந்தர் மகன்கள் ஸன்னி, பாபி. மகள்கள் விஜிதா, அஜிதா...(விஜய்-அஜித்😀)
தரம்-ஹேமா மகள் தமிழில் ட்ரை செய்தார். ஈஷா மணியோட 'ஆயுத எழுத்து' படத்தில் நடித்தார். தர்மேந்திரா தென்னிந்தியாவிலிருந்து வந்து ஒரு ஹீரோவாக நடித்த ஒரு நடிகரோட படத்தில் Guest roll பண்ணிக்கொடுத்ததில் எந்த ஈகோவும் பார்த்ததில்லை. ஆம். அந்தா கானூன் படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் செய்து அமிதாப்-ரஜினி ரெண்டு பேரையும் ஆச்சர்யப்படுத்தியவர்.
ஷோலே என்கிற ஒரு படம் போதும். தரம்ஜி...எப்போதும் எங்கள் மனதில் இருப்பீர்கள்.
அஞ்சலிகள்....
Selvan Anbu


