கம்போடியாவில் நடைபெற்ற கடாரம் கொண்டான் இராசேந்திர சோழன் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற தமிழறிஞர், கணினி வல்லுநர் திரு க. சிவகுருநாதபிள்ளை (சிவாப்பிள்ளை) அவர்கள், வயது 83, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
லண்டனில் சைவமும் தமிழும் வளர்ச்சியடைய தன்னாலான பல தொண்டுகளை செய்து வந்தவர். தமிழ் இணையத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே கணித்தமிழ் மேம்பாட்டில் அவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.



