TamilsGuide

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த முயற்சி

கனடா மற்றும் இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மிக அதிக அளவில் விரிவாக்கும் புதிய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்திற்கான (CEPA) பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட உள்ளது.

கடந்த காலங்களில் முரண்பாடுகளிானல் பாதிக்கப்பட்டிருந்த இருநாட்டு உறவை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியின் பகுதியாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய CEPA ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால் இருநாட்டு வர்த்தகம் 70 பில்லியன் டாலர் வரை இரட்டிப்பாக அதிகரிக்கும் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கார்னி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் சந்தித்தபோது இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும், கார்னி 2026 ஆரம்பத்தில் இந்தியா விஜயம் செய்வது குறித்த அழைப்பையும் ஏற்றுள்ளார். இந்தியா நம்பகமான வர்த்தக கூட்டாளி” என கார்னி தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில் முரண்பாடுகள் இருக்கும் போதிலும், பிரச்சினைகளை தீர்க்க முறையான செயல்முறைகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


 

Leave a comment

Comment