TamilsGuide

அமெரிக்கா ஆதரவு பெற்ற உதவி நிறுவனம் காசாவில் செயல்பாட்டை நிறுத்தியதாக அறிவிப்பு

இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு பல்வேறு உதவி நிறுவனங்கள் உதவி செய்து வந்தன. மனிதாபிமான அடிப்படையில் உணவுப்பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை வழங்கி வந்தன. இதில் காசா மனிதாபிமான பவுண்டேசன் என்ற நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதரவு நிறுவனம் என சர்ச்சைக்குள்ளானது.

கடந்த 6 வாரத்திற்கு முன்னதாக இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்படடது. இதனால் விநியோகம் மையங்களை மூடியது. இந்த நிலையில், காசாவில் நிறுவனம் மூடப்படுவதாக இன்று அறிவித்துள்ளது.

"காசா மக்களுக்கு உதவி வழங்குவதற்கு ஒரு சிறந்த வழி இருக்கிறது என்பதை காட்டும் எங்கள் பணியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்" என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment