TamilsGuide

பாகிஸ்தான் துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் - 3 வீரர்கள் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள பெஷாவரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சதார் பகுதியில் அமைந்துள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தில் நேற்று காலை 8 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்தது.

நேற்று காலை ராணுவ வீரர்கள் வழக்கமான படை அணிவகுப்பு நடத்தியபோது 3 பயங்கரவாதிகள் துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் பிரதான வாயிலின் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். அதில் ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிச்சக் செய்தான். இதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து மற்ற 2 பயங்கரவாதிகளும் உள்ளே நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர். அவர்கள் மீது ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். காயமடைந்த ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு 'தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான்' அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 


 

Leave a comment

Comment