TamilsGuide

பெண் வேடத்தில் நடித்த எம்.ஜி.ஆர்.. மறக்க முடியாத காதல் வாகனம்

எம்ஜிஆர், மேலை நாட்டு நவநாகரீக நங்கையாக குட்டைப் பாவாடை சகிதமாக நடிகர் அசோகனிடம் இருந்து ஜெயலலிதாவை மீட்பது போன்ற ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடித்திருக்கின்றார் என்றால் அது தேவர் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட "காதல் வாகனம்" என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் தான். ஆரம்பத்தில் இது குறித்து அவரிடம் கூறிய போது முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாராம். அதன் பிறகு அந்த காட்சி ஒரு நகைச்சுவைக்காக தேவைப்படுகிறது என்றவுடன் அவர் சம்மதித்தாராம். படம் வெளியான பிறகு அந்த காட்சி பலராலும் ரசிக்கப்பட்டது.

இது எம் ஜி ஆரின் திரைப்படங்களில் அரிதான ஒரு காட்சியாக பார்க்கக் கூடிய ஒன்று. மேலும் எம்ஜிஆருக்காக பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பின்னணி பாடிய ஒரே ஒரு பாடலும் இந்தப் பாடலாகத்தான் இருக்கும். "என்ன மேன் பொண்ணு நான் சும்மா சும்மா பார்க்காதே" என்று ஆரம்பமாகும் இப்பாடல். எம்ஜிஆரின் ஆஸ்தான ஆடை வடிவமைப்பாளரான எம்.ஏ.முத்துதான் இப்பாடல் காட்சிக்காகவும் ஆடை வடிவமைத்துக் கொடுத்தவர்.

தமிழச்சி கயல்விழி
 

Leave a comment

Comment