TamilsGuide

மோசமான வானிலையால் 1,790 பேர் பாதிப்பு, 10 பேர் உயிரிழப்பு

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களில் 504 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களில் வானிலை தொடர்பான அனர்த்தங்களினால் குறைந்தது 10 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. 

மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 193 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் DMC தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், ஏதேனும் பேரிடர் அல்லது வானிலை தொடர்பான அவசரநிலை ஏற்பட்டால் 117 என்ற துரித இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment