யால சரணாலயத்தின் கோனகன் ஆரா பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பெரிய அளவிலான மூன்று கஞ்சா சாகுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த இடத்திலிருந்து 200,000 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளும் 50 கிலோகிராம்களுக்கும் அதிகமான உலர்ந்த கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது மூன்று சாகுபடிகளும் பொலிஸார் தீயிட்டு அளித்துள்ளனர்.


