கடுகன்னாவையில் சனிக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் இருந்து இடிபாடுகளை அகற்ற இரசாயன வெடிப்பு நடத்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பேருந்து டிக்கெட் வாங்குவதற்கு வங்கி அட்டை கட்டணங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், மகும்புர பல்நோக்கு பேருந்து நிலையத்தில் இன்று (24) காலை தொடங்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரித்த அவர்,
மண்சரிவைத் தொடர்ந்து பெரிய பாறைகளை அகற்றுவதற்கான இரசாயன வெடிப்பு செயல்முறையைத் தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆலோசனையின் அடிப்படையில் இது நடத்தப்படும்.
இந்த செயல்முறைக்கும் குப்பைகளை அகற்றுவதற்கும் குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனையின் அடிப்படையில், தற்காலிக நடவடிக்கையாக, போக்குவரத்துக்காக ஒரு பாதையைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
மண்சரிவின் ஆபத்தின் ஆழத்தை அறிய அப்பகுதியில் ட்ரோன் மற்றும் புவியியல் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளோம் – என்றார்.


