ஜேர்மனியில் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் ரயில் தடம் புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (22) பிற்பகல் ஆக்ஸ்பர்க் – புச்லோ – ஃபுசென் பாதையில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்பர்க்கில் இருந்து புறப்பட்ட ரயில், வேறொரு பாதைக்கு மாற்றப்படும்போது தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடம் புரண்டதற்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை எனவும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளதுடன், 150 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


