தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் எதிர்த்து வருகிறது.
இதற்கிடையே, ஜப்பான் புதிய பிரதமர் சனே தகாய்ச்சி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தைவானுக்கு எதிராக சீன கடற்படை அத்துமீறினால், ஜப்பான் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என தெரிவித்தார். அவர் அக்கருத்தை பிறகு திரும்ப பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ஜப்பான் பிரதமருக்கு சீன வெளியுறவு மந்திரி வாங் யீ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜப்பான் பிரதமரின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. தைவான் பிரச்சனையில் அவர்கள் ராணுவ தலையீட்டுக்கு முயற்சிப்பது தவறான சமிக்ஞையாகக் கருதப்படும். அவர்கள் சிவப்பு கோட்டை தாண்டக் கூடாது. ஜப்பான் நடவடிக்கையில் ஈடுபட்டால் சீனா உறுதியாக பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.


