TamilsGuide

பென்ஸ் திரைப்பட அப்டேட் கொடுத்த நிவின் பாலி

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் "ஜி ஸ்குவாட்" நிறுவனம் தயாரிப்பில் 'பென்ஸ்' திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே 'ரெமோ', 'சுல்தான்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 'பென்ஸ்' திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.

இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தில் நடிகர் மாதவன் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ட்வின் ஃபிஷ் வால்டர் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.

'பென்ஸ்' திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் நடிக்கிறார். இதன் மூலம் அவர் லோகேஷ் சினிமாட்டிக் உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் இணையாக ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர் 'கைதி 2' மற்றும் 'விக்ரம் 2' படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. நடிகை சம்யுக்தாவும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 'பென்ஸ்' படப்பிடிப்பின் முதல் கட்டப் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 
 

Leave a comment

Comment