TamilsGuide

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் 2வது சிங்கிள் அப்டேட்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் 18-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், 'LIK' படத்தின் 2வது பாடல் 'பட்டுமா' வருகிற 27-ந்தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

முன்னதாக இப்படம் தொடர்பாக வெளியான டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், 2-வது பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 

Leave a comment

Comment