TamilsGuide

ஆர்யன் படத்தின் OTT குறித்து வெளியான அப்டேட்

'வெண்ணிலா கபடிகுழு', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்', 'கட்டா குஸ்தி' போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் வெளியான படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கி இருந்தார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு சாம். சி. எஸ். இசையமைக்க விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்து இருந்தது.

'ஆர்யன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த மாதம் 31-ந்தேதி வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறாத நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், 'ஆர்யன்' படம் வருகிற 28-ந்தேதி ஓ.டி.டி. தளமான நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment