(Jeffrey Epstein) ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தவர்கள் எவரும் முன்வந்து வாக்குமூலம் வழங்கி விசாரணைக்கு உதவுமாறு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
(Jeffrey Epstein) ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் (Andrew Mountbatten Windsor) அமெரிக்க காங்கிரஸின் நேர்காணல் கோரிக்கைக்குப் பதிலளிக்கத் தவறியதை அடுத்து
எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான பொருத்தமான தகவல்களைக் கொண்டவர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று ஒரு பொதுவான கொள்கையை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அவர் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் நிலை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அமெரிக்கச் சட்டமன்ற உறுப்பினர்கள் எப்ஸ்டீன் மீதான தங்கள் விசாரணைக்கு ஆண்ட்ரூ ஒத்துழைக்காத காரணத்தால் ஆண்ட்ரூவின் “மௌனத்தை” அவர்கள் விமர்சித்துள்ளதுடன் அது பல உண்மைகளை மறைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் ஆண்ட்ரூ தனக்கு எந்த சட்டப்பூர்வ கடமையும் இல்லை என்றும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இதேவேளை, எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிலைப்பாட்டிற்காக காங்கிரஸ் பெண்மணியான கிறீன் (Ms Greene’s) அவரை விமர்சித்தமையினால் , அண்மையில் (Ms Greene’s) கிரீனுடன் பொதுமக்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாலியல் கடத்தல் மற்றும் சதி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக காத்திருக்கும் போது கடந்த 2019 ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட குழந்தை பாலியல் நிதியாளரான எப்ஸ்டீனுடனான ஆண்ட்ரூவின் “நீண்டகால நட்பு” தொடர்பாக ஹவுஸ் மேற்பார்வைக் குழு உறுப்பினர்கள் அவருடன் விசாரணைக்கான நேர்காணல் ஒன்றை கூறியிருந்த பின்னணியில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


