TamilsGuide

கடுகன்னாவை மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்மேடு மற்றும் கற்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில், குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த தேடுதல் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டிருந்த மேலும் நான்கு பேர் தற்போது மாவனெல்ல ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கண்டி வீதியிலுள்ள பஹல கடுகண்ணாவ மற்றும் மாவனெல்லவுக்கு இடையிலான பகுதி மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment