TamilsGuide

கனமழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – பல பகுதிகளுக்கு மண்சரிவுஎச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. பதுளை, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள மேலும் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 01 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை அதிகளவான மழையின் காரணமாக தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தெதறு ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் தப்போவ நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களில் அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment