TamilsGuide

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 15வது படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியீடு

2021-ம் ஆண்டு வெளியான 'லிப்ட்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வினீத் வரபிரசாத். இப்படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இயக்குநர் வினீத் வரபிரசாத் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'HK15'-ல் பணியாற்றி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாணும், கதாநாயகியாக பிரீத்தி முகுந்தனும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திங்க் ஸ்டுடியோஸ், புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு இது 15-வது படமாகும்.

தொடர்ந்து, வினீத் வர பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் புரோமோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ஹரிஷ் கல்யாணின் 15வது படத்திற்கு 'தாஷமக்கான்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான, ப்ரோமோவை படக்குழு அறிவித்துள்ளது.

Leave a comment

Comment