TamilsGuide

சிவாஜியிடம் மன்னிப்பு கேட்ட சில்க் ஸ்மிதா.. 

திமிரில் அப்படி செய்யவில்லை.. சிவாஜியிடம் மன்னிப்பு கேட்ட சில்க் ஸ்மிதா.. என்ன நடந்தது

தமிழ் சினிமா வரலாற்றில் சில்க் ஸ்மிதாவின் பெயரை எந்த காலத்திலும் மறக்க முடியாது. ஆந்திராவில் விஜயலட்சுமியாக பிறந்தவர் வினு சக்கரவர்த்தியின் வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது கவர்ச்சியால் அனைவரையும் கிறங்கடித்து சில்க் ஸ்மிதாவாக மாறினார். அப்போதிருந்தே அவருக்கென்று ரசிகர்கள் அதிகரிக்க ஆரம்பித்தனர்.

சில்க் ஸ்மிதாதான் கவர்ச்சிக்கு புது இலக்கணம் எழுதியவர். கவர்ச்சி என்றால் உடம்பில் மட்டும்தான் இருக்கிறது என்ற நிலையை மாற்றி கண்ணிலும், பேசும் தொனியிலுமே இருக்கிறது என்பதை முதன்முறையாக நிரூபித்து காட்டியவர் என்றால் அது சில்க் ஸ்மிதாதான். அதனால்தான் அவரது பார்வைக்காகவே பலர் ஏங்கியிருந்தனர்.

அவர் உச்ச நட்சத்திரமாக வளர்ந்த பிறகு நிற்க நேரமின்றி நடித்துக்கொண்டிருந்தார். பல மொழிகளில் நடித்த அவர் நடித்தபோது ஒருமுறை மோகன் லால் படத்தில் நடனம் ஆட கமிட்டானார். ஆனால் அவரால் கேரளாவுக்கு செல்ல முடியவில்லை. உடனே ஸ்மிதாவோ மோகன் லாலை இங்கே வந்து வேண்டுமானால் ஆடிவிட்டு போக சொல்லுங்கள் என்று கூறியதாகவும் ஒரு தகவல் அப்போது பரவியது உண்டு.

சில்க் ஸ்மிதாவை பெரும்பாலானோர் திமிர் பிடித்தவர் என்றே சொல்வார்கள். ஆனால் அவரோ அந்த திமிரை தனது கவசமாக பார்த்தவர். அப்படி இருந்தால்தான் நம்மிடம் யாரும் நெருங்கமாட்டார்கள் என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதேசமயம் யாரிடமாவது நெருங்கி பழகிவிட்டால் அவர்களிடம் குழந்தையாகவே மாறும் பழக்கமுடையவர். குறிப்பாக அவருடன் நெருங்கி பழகிய அனைவருமே சொல்லும் ஒரே வார்த்தை, ஸ்மிதா அவ்வளவு வெகுளியான ஆள் என்பதுதான்.

இந்நிலையில் ஒரு விழாவுக்கு சிவாஜி வந்தபோது மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நிற்க சில்க் ஸ்மிதா மட்டும் திமிருடன் அமர்ந்திருந்தார் என்று ஒரு தகவல் காலங்காலமாக உண்டு. ஆனால் அதற்கு ஒரு வேறு ஒரு காரணம் இருப்பதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருந்தார். அவர் அளித்த ஒரு பேட்டியில், "சில்க் ஸ்மிதா அப்படி நடந்துகொண்டார் என்று கூறப்படும் நிகழ்ச்சிக்கு அவர் ஷூட்டிங்கிலிருந்து நேரடியாக வந்திருந்தார்.

ஷூட்டிங்கிலிருந்து வந்ததால் அங்கு போட்டிருந்த கவர்ச்சி ட்ரெஸ்ஸோடு வந்துவிட்டார். அப்படிப்பட்ட நிலைமையில் நாம் எழுந்து நின்றால் எல்லோரும் தன்னைத்தான் பார்ப்பார்கள். சிவாஜியை கண்டுகொள்ளமாட்டார்கள் என்று நினைத்ததால்தான் ஸ்மிதா எழுந்து நிற்கவில்லை. மேலும் இதை சிவாஜியிடமே விழா முடிந்த பிறகு அவர் கூறி மன்னிப்பும் கேட்டார். சிவாஜியும் சில்க்கிடம் எனக்கும் சினிமாவை பற்றி தெரியும் என கூறி சில்க்கை புரிந்துகொண்டாராம் .

தமிழச்சி கயல்விழி

Leave a comment

Comment