நடிப்பதை இதோடு நிறுத்திவிடு; உன் நடிப்பை பார்க்க முடியல: ஆசீர்வாதம் கேட்ட டி.எம்.எஸ்க்கு சிவாஜி கொடுத்த எச்சரிக்கை!
சிவாஜி கணேசன், டி.எம்.எஸ் இருவரும் ஒருமுறை சந்தித்தபோது நடந்த சுவாரசியமான உரையாடல், கலைத் துறையின் நிபுணத்துவம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது
தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் இசைச் சக்கரவர்த்தி டி.எம். சௌந்தரராஜன் ஆகியோருக்கு இடையே நடந்த ஒரு எதிர்பாராத சம்பவம், அவர்களின் தனித்துவமான சினிமா உறவை வெளிப்படுத்துகிறது. ஒருபுறம், தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த நடிப்பின் சிகரம் சிவாஜி; மறுபுறம், அசைக்க முடியாத குரலின் சொந்தக்காரர் டி.எம்.எஸ். இந்த இரு ஆளுமைகளும் தங்கள் துறைகளில் உச்சத்தை அடைந்தவர்கள்.
இந்த பின்னணியில், 'பட்டினத்தார்' என்ற படத்தில் டி.எம்.எஸ் நடித்த சிவாஜியை சந்தித்த பிறகு நடந்த ஒரு சுவாரசியமான விஷயத்தை பற்றி பார்ப்போம். இதுகுறித்த வீடியோ யான் பெற்ற இன்பம் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. 'பட்டினத்தார்' படத்தில் நடித்திருந்த டி.எம்.எஸ்., பெருமிதத்துடன் நடிகர் சிவாஜி கணேசனை சந்திக்கச் சென்றார். அப்போது, "நான் ஒரு சிறந்த நடிகர். நான் நடித்த இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும். என்னை ஆசீர்வதியுங்கள்" என்று டி.எம்.எஸ். கேட்டார்.
இதற்கு சிவாஜி அளித்த பதில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சிவாஜி சிறிதும் தயங்காமல், துணிச்சலுடன், "நடிப்பதை இதோடு நிறுத்திவிடுங்கள். நான் எந்த ஆசீர்வாதமும் கொடுக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார். சிவாஜியின் இந்த கூற்று, தனிப்பட்ட வெறுப்பில் இருந்து வந்ததல்ல; மாறாக, தங்கள் துறையின் மீது இருவருக்கும் இருந்த ஈடுபாட்டையும், நிபுணத்துவத்தின் மீது அவர்கள் வைத்திருந்த மரியாதையையும் காட்டுகிறது. இதை விளக்கும் விதமாக, சிவாஜி, "டி.எம்.எஸ் நடித்தால் யாரும் பார்க்க மாட்டார்கள், நான் பாடினால் யாரும் கேட்க மாட்டார்கள்" என்று கூறினார்.
சிவாஜி, தன்னை சந்திக்க வந்த டி.எம்.எஸ் - யை பார்த்து நடிப்பதை இதோடு நிறுத்திவிடுங்கள். நீங்கள் நடித்தால் யாரும் பார்க்க மாட்டார்கள், நான் பாடினார் யாரும் கேட்க மாட்டார்கள் என்று கூறினார். சிவாஜி கணேசன் ஒரு சிறந்த நடிகராகவும், டி.எம்.எஸ். ஒரு சிறந்த பாடகராகவும் இருந்தால்தான் மக்களுக்கு பிடிக்கும் என்பதை வெளிப்படுத்தினார். அந்தக் காலத்தில், சிவாஜி கணேசன் திரைக்கு வந்தால், 'படம் ஏற்கெனவே விற்றுவிட்டது, புது டிக்கெட் வாங்க வேண்டும்' என்று மக்கள் கூறுவார்கள். இது, சிவாஜியின் நடிப்புக்கு மக்கள் அளித்த வரவேற்பின் உச்சபட்ச எடுத்துக்காட்டு.
தமிழச்சி கயல்விழி


