TamilsGuide

படப்பிடிப்பில் காயமடைந்த ஸ்ரத்தா கபூர் - சோகத்தில் ரசிகர்கள்

Eetha படத்தின் நடனக் காட்சியை ஒத்திகை செய்து பார்க்கும்போது நடிகை ஸ்ரத்தா கபூர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற தமாஷா கலைஞர் விதாபாய் பாவ் மங் நாராயண்கோன்கரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் 'ஈதா'. இப்படத்தில் விதாபாய் கதாபாத்திரத்தில் பாலிவுட் டால் நடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துவருகிறார். ரந்தீப் ஹூடா கதாநாயகனாக நடிக்கிறார். லக்ஷ்மன் உடேகர் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் பாடல் ஒன்றுக்கு நடக ஒத்திகை செய்து பார்த்தபோது ஸ்ரத்தா கபூரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

நடனத்தின்போது மொத்த உடல் எடையையும் இடதுகாலில் போட்டதாக தெரிகிறது. இதனால் இடதுகால் விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பை இரண்டு வாரத்திற்கு இயக்குநர் உடேகர் நிறுத்தி வைத்துள்ளார். ஆனால் முக்கிய காட்சிகளை எடுத்துவிடலாம் என ஸ்ரத்தா கூறியதாக தெரிகிறது. இச்செய்தி ஸ்ரத்தா கபூர் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Comment