TamilsGuide

கொட்டகலை ஸ்டோனிகிலிப்ஸ் தோட்டத்தில் மண்சரிவு

மத்திய மலைநாட்டில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக நேற்று (21) மாலை 6.00 மணியளவில் கொட்டகலை ஸ்டோனிகிலிப் தோட்டத்தில் இரண்டு இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த பலத்த மழையைத் தொடர்ந்து இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் ,ஸ்டோனிகிலிப் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால், வீட்டிற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மண்சரிவு ஏற்பட்ட போது நான்கு குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்குள் இருந்துள்ளதாகவும் குடும்ப உறுப்பினர்களின் கடும் முயற்சியால், மண்மேடு சரிந்து விழுந்த அறையிலேயே இருந்த சுமார் 77 வயதுடைய பெண்மணி ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ,ஸ்டோனிகிலிப்ஸ் தமிழ் வித்தியாலய ஆசிரியரின் உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாகத்தின் பின் பகுதி மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டு சம்பவங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment