யாழ்ப்பாணம் குருநகர் கடல் பகுதியிலிருந்து சிறுவனின் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குருநகர் பகுதியில் கடலட்டைப் பண்ணையை பார்க்க நேற்று இரவு (21) சென்ற சிறுவன் காணாமல் போயிருந்த நிலையில் அப்பகுதி மக்களால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை (22) குறித்த சிறுவனின் சடலம் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குருநகர் பகுதியில் கடலட்டைப் பண்ணையை பார்க்க சென்ற நிலையில் குறித்த சிறுவன் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


