ஊமை விழிகள் படத்தில் வரும் ராத்திரி நேரத்து பூஜையில் பாடலை அடிக்கடி பார்ப்பேன். மனோஜ் கியான் இசை, சசிரேகா குரல், உங்க டான்ஸ் மிகவும் பிடிக்கும் என்றேன்.
அதை கேட்டு அக்கா டிஸ்கோ சாந்தி செமயாக கலாய்த்தார். நண்பர்களுடன் சில மணி அரட்டைக்குபின் ஐதராபாத் வீட்டில் இருந்து விடை பெ ற்ற போது மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு என மாடியில் நின்று பாடி, கலாய்த்து வழி அனுப்பி வைத்தார்
நாம் திரையில் பார்க்கும் நடிகர், நடிகைகள் வே று. நிஜத்தில் அவர்கள் வேறு.அவர்களிடம் அவ்வளவு நல்ல குணங்கள், பேச நிறைய விஷயங்கள் இருக்கிறது, குறிப்பாக கவர்ச்சி நடிகைகள் வாழ்க்கை எப்படி என்பதை உணர்ந்து கொண்ட தருணம் அது. அதிலும் அக்காவின் வெளிப்படையான கிண்டல் பேச்சு சூப்பர்.
பெரும்பாலான படப்பிடிப்பில் பாடல் காட்சி முடிந்தவுடன் தன்னுடன் ஆடுபவர்களுக்கு ஐஸ்கீரிம், சாப்பிட ஏதாவது வாங்கிகொடுப்பேன். செட்டில் யாராவது உதவி கேட்டால் அம்மாவை ஏமாற்றி விட்டு , தயாரிப்பாளர் சம்பளம் தரவில்லை என பொய் சொல்லி அவர்களுக்கு உதவுவேன். கிட்டத்தட்ட 900க்கும் அதிகமாக படங்களில் நடித்துவிட்டேன். இரண்டு மகன் கள், நல்லா இருக்கிறேன் என்றார்
டிஸ்கோ சாந்தி வாழ்க்கையை சினிமாவாக எடுக்கலாம்.
Meenakshi Sundaram


