இந்தாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிகோவை சேர்ந்த பாத்திமா போஷ், 25, தேர்வு செய்யப்பட்டார்.
'மிஸ் யுனிவர்ஸ்' என்பது சர்வதேச நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ளும் வருடாந்திர போட்டியாகும். இந்தாண்டுக்கான போட்டி, தாய்லாந்தில் உள்ள இம்பாக்ட் சேலஞ்சர் ஹாலில் நடந்தது.
100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதி சுற்றில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் வெற்றி பெற்று, 2025ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி சென்றார்.
இரண்டாம் இடத்தை தாய்லாந்து அழகியும், மூன்றாம் இடத்தை வெனிசுலா அழகியும் தட்டி சென்றனர்.
வெற்றி பெற்ற பாத்திமா, நடனம் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


