இங்கிலாந்தில் அதிகரித்து வரும் செலவுகளை நிவர்த்தி செய்ய கட்டுமான அபிவிருத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் வீடுகள் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இங்கிலாந்து அரசாங்கத்தின் குழந்தைகளுக்கான கட்டுமானம் என்ற வீட்டுக் கொள்கையும், 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் வீடுகளின் எண்ணிக்கையும் ஒன்பது ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக இங்கிலாந்து புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
கட்டுமானச் செலவுகள் அதிகரிப்பு, விதிகள் மற்றும் வரிச்சுமை போன்ற காரணங்களால் இலக்கை எட்டுவது கடினம் என கட்டுமானத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கட்டிடப் பொருட்களின் விலை உயர்வு ( செங்கற்களின் விலை 26% அதிகரிப்பு) மற்றும் அதிக வட்டி விகிதங்கள் காரணமாக நிதிச் செலவுகள் அதிகரிப்பது ஆகியவை வீடுகளை உருவாக்குபவர்களுக்கு லாபத்தைக் குறைத்து நட்டத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வீட்டு விலைகள் குறைந்த அல்லது மந்தமான நிலையில் இருக்கும்போது செலவுகள் அதிகரிப்பதால், இது பல்வேறு சிக்கல்களை உருவாக்குவதாகவும் அதனால் அங்கு வளர்ச்சித் திட்டங்கள் சாத்தியமற்றதாகின்றதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் இலக்கை அடையவில்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், புதிய கொள்கைகள் மூலம் கட்டுமானம் அதிகரிக்கும் என்று நம்புகிறது.


