TamilsGuide

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானம்

துபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குப் பறந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம் EK-434, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டதன் விளைவாக விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அவசரகால நெறிமுறைகளை செயல்படுத்தியதுடன், உடல் நிலை பாதிக்கப்பட்ட பயணி வெளியேற்றப்பட்டு அவசர மருத்துவ சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான A380 ரக இந்த விமானம், நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி, பின்னர் இரவு சுமார் 9.20 மணியளவில் பிரிஸ்பேன் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.
 

Leave a comment

Comment