முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அவருடன் அவரது மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவும் உடனிருந்தார்.
இருவரும் அதிகாலையில் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் இந்தியாவுக்கான பயணத்திற்காக காலை 8:40 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-121 ஏறியதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.


