நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாட்டை எதிர்த்தும் சர்மா ஒலி அரசின் ஊழல் மற்றும் நாட்டின் பொருளாதார பிரச்னைகளை எதிர்த்தும் ஜெனரல் z இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் வன்முறையாக மாறி, பாராளுமன்றம், நீதிமன்றம், அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையில் 76 பேர் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து சர்மா ஒலி மற்றும் அமைச்சர்கள் பதவி விலகினர்.
தொடர்ந்து ஜெனரல் z விருப்பப்படி அந்நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுசீலா கார்க்கி இடைக்கால தலைவராக பதவி ஏற்றார். நேபாளத்துக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் நேபாளத்தின் பாரா மாவட்டத்தின் சிம்பாரா பகுதியில் ஜெனரல் z மற்றும் சர்மா ஒலி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அரசாங்க எதிர்ப்பு பேரணியில் உரையாற்ற சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வருவதை எதிர்த்து ஜெனரல் z எதிர்த்து வீதியில் இறங்கி போராடிய நிலையில் நேற்று, சிமாரா விமான நிலையம் அருகே அவர்களுக்கும் சர்மா ஒழி ஆதரவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நிலைமை மோசமடைவதை தடுக்க சிமாராவில் இன்று பிற்பகல் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


