ராமகிருஷ்ண அய்யர். சினிமாவில் அந்த கால ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்து படங்களில் இருந்து சினிமா அர்ச்சகராக இருந்தவர்.
இளம் வயதாக சில ப்ளாக் அண்ட் ஒயிட் படங்களிலும் இவரை பார்த்துள்ளேன். 80, 90களில் வந்த பெரும்பாலான படங்களில் இவர் நடித்துள்ளார். அதாவது சினிமா பூஜை உட்பட சினிமா விழாக்கள் அனைத்திற்கும் இவர்தான் பூஜகர்.
இந்த நட்பில் பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் வரும் திருமண காட்சிகள், பிராமணர் வரும் காட்சிகளில் இவரை நடிக்க வைத்திருப்பார். குறிப்பாக உழைப்பாளி படத்தில் வரும் ராங் ரூட்டில் பைக் செல்லும் காட்சியில் பகவான் போக சொன்னார் போனேன் என்ற நகைச்சுவை காட்சிதான் இவரை அதிகம் பேரிடம் கொண்டு போய் சேர்த்தது.
கமல்ஹாசன் நடித்த மீண்டும் கோகிலா படத்தில் கமல் , ஸ்ரீதேவி திருமணத்தை புரொகிதம் செய்யும் அய்யராக இவர் நடித்திருப்பார். இது ஒரு உதாரணம் தான் ஆனால் எண்ணற்ற படங்களில் இது போல புரொகிதம் செய்வது போல சின்ன சின்ன படங்களில் நடித்துள்ளார்.
உடல் நல கோளாறு காரணமாக 2018 ம் ஆண்டு ஜனவரி மாதம் இவர் காலமானார்.
Abiram Arunachalam


