வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர், ஹஷிஷ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிலாம் பிரதான வீதியில் ஜெயவர்தனபுர முகாமைச் சேர்ந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அதிகாரிகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர், 07 கிலோ கிராம் 974 கிராம் ஹாஷிஷ் மற்றும் 01 கிலோ கிராம் 580 கிராம் கஞ்சா ஆகியவற்றையும் சந்தேக நபர் வசம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார்.
கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


