பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7வது திரைப்படத்தின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
‛மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்', 'டாணாக்காரன்', 'இறுகப்பற்று', 'பிளாக்' என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
தேவதர்ஷினி, ‛நான் மகான் அல்ல' புகழ் வினோத் கிஷன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் மேலும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர்.
அறிமுக இயக்குநர் திரவியம்.எஸ்.என் இயக்கும் இப்படத்தின் திரைக்கதையை திரவியமுடன் இணைந்து பிரவீன் பாஸ்கர், ஸ்ரீ குமார் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க்க, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். ஆரல் ஏ.தங்கம் படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பாளராக மாயபாண்டி பணியாற்றுகிறார். ஆடை வடிவமைப்பாளராக இனஸ் ஃபர்ஹான் மற்றும் ஷேர் அலி பணியாற்றுகிறார்கள்.
பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், தங்கபிரபாகரன்.ஆர் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமாக விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


