TamilsGuide

வெள்ளை மாளிகையில் விருந்து - சவுதி பட்டத்து இளவரசருடன் கலந்து கொண்ட ரொனால்டோ

சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்தார். அப்போது, சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கலந்து கொண்டார். சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இவரை அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த விருந்தில் கலந்து கொண்டதற்காக ரொனால்டோவிற்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். மேலும், தன்னுடைய மகன் பரோன் தங்களுடைய மிகப்பெரிய ரசிகர். vனத் தெரிவித்தார்.

இந்த விருந்து நிகழ்ச்சியல் ஆப்பிள் சிஇஓ டிம் குக், டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2022-ம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியா லீக்கில் உள்ள அல்-நாசர் கிளப்பில் விளையாட ஒப்பந்தம் ஆனார். அதில் இருந்து சவுதி கால்பந்து லீக்கின் முகமாக அறியப்படுகிறார். 40 வயதான போர்ச்சுக்கலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனல்டோ, அல்-நாசர் கிளப் உடனான ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார்.
 

Leave a comment

Comment