ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது
தமிழரசுக் கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் நடாளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன் ஞா.ஸ்ரீநேசன் எஸ் ஸ்ரீதரன் உள்ளிட்ட 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்
அரசியல்தீர்வு மாகாண சபை தேர்தல் தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சியினர் இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் ஆட்சிப்பொறுப்பெடுத்து ஆண்டொன்று நிறைவடைந்தும் நிறைவேற்றப்படாதிருக்கும் நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு தனது மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானித்திருந்தது.
அதனையடுத்து தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை குறித்து நேரடியாகப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தாருங்கள் என்று கோரி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பமிட்டு கடிதம் ஒன்றை கடந்த செப்டெம்பர் மாதத்தின் இறுதியில் அனுப்பியிருந்தனர்.அதேநேரம், சிவஞானம் சிறிதரனும், இராசமாணிக்கம் சாணக்கினும் ஜனாதிபதியுடன் சந்திப்பை நடத்துவதற்கான கோரிக்கையை விடுத்திருந்தனர்.
இதன் அடிப்படையிலேயே இன்றையதினம் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது .


