மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயில் சேவையானது ஓஹிய – இடல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளத்தில் மேண்மேடு சரிந்து வீழந்தமையினால் பாதிக்கப்பட்டது.
பின்னர் குறித்த ரயில் திரும்பிச் சென்றுள்ளதாகவும், இதன் காரணமாக கொழும்பிலிருந்து வரும் ரயில் போக்குவரத்து நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று கண்டியிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயில் ஒன்று ஓஹியா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால், மலையக மார்க்கமூடான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
பின்னர் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை மீட்டெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


